Loading...
உலகின் மிகவும் வயதான பிரதமராக மஹதிர் மொஹமட் பதவி வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவில் நடைபெற்ற தேர்தலில் 92 வயதான மஹதிர் மொஹமட் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தேர்தல் வெற்றியானது ஆளும் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
மஹதிர் மொஹமட் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட நீண்ட காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு இம்முறைத் தேர்தலில் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1957ம் ஆண்டு முதல் பதவியில் நீடித்து வந்த மஹதிர் மொஹமட்டின் முன்னைய கட்சியை தோற்கடித்தே இந்த வெற்றி பதிவாகியுள்ளது.
மக்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக ஆளும் கட்சியின் நாஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
Loading...