ஹைதராபாத்தில் 13 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் நெஞ்சை உருகவைத்துள்ளது.
இரண்டு முறை எனது தந்தை என்னை பலாத்காரம் செய்தார், முதல் முறை குடிபோதையில் செய்துவிட்டேன் என கூறியதால், எனது அம்மா அவரை மன்னித்துவிட்டார்.
ஆனால், சில நாட்கள் கழித்து மீண்டும் இவ்வாறு நடந்துகொண்டார்.
வேலைக்கு சென்றிருந்த சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பியதும் வழக்கம்போல உற்சாகம் இல்லாமல் மகள் படுத்திருப்பதை கவனித்துள்ளார். அப்போது தேம்பி தேம்பி அழுதவாறு சிறுமி இருந்துள்ளார். இதனை வைத்து வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை அவர் யூகித்துக்கொண்டார்.
தற்போது வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூரத்தை அந்த சிறுமி கூறுகையில், அம்மாகிட்ட சொன்னதற்காக என்னை அடித்து எட்டி உதைத்தார்.
நான் பாத்ரூம்க்குள் ஓடிப்போய் கதவினை சாத்திக்கொண்டேன். ஆனா அவர் கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே வந்து, பெல்ட்டால் என்னை அடிச்சார். என்னை கட்டாயப்படுத்தினார். நான் சத்தம் போட்டது எங்க பக்கத்து வீட்ல இருந்தவங்களுக்கு கேட்டிருக்கும் ஆனா யாரும் உதவி செய்ய வரவில்லை.
அவங்களுக்கு இவர் என் அப்பா இல்லைன்னு தெரியாது. 8 வருசத்துக்கு முன்னாடி தான் எங்க அம்மா இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என் தம்பிக்கு கூட இது தெரியாது என கூறியுள்ளார்.
இதற்கிடையில் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் பேசிய சிறுமி, என் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. இந்த சம்பவம் மறுபடியும் நடக்கும். நான் அப்பாகிட்ட சொன்னேன் இப்படி செய்யாதீங்கன்னு அவர் கேட்கவே இல்ல. நான் விடுதியில் தங்கி படித்து பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் என் கனவு என அந்த சிறுமி கூறியிருப்பது நெஞ்சை உருகவைத்துள்ளது.