Loading...
கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone X கைப்பேசிக்கு உலகளவில் பாரிய வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
இவ்வாறான நிலையில் இவ் வருடம் iPhone X Plus எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது இக் கைப்பேசி தொடர்பில் மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
இதன்படி 6.5 அங்குல அளவினைக் கொண்ட OLED திரையினை உள்ளடக்கியதாக குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone X ஆனது 5.8 அங்குல அளவுடைய OLED திரையினைக் கொண்டதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...