முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக பல்கலைகழக மாணவர்கள் செயற்படகூடாதென இன்று சமரச முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று யாழில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, பின்னர் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.
அஞ்சலி நிகழ்வை குழப்பும் விதமாக செயற்படகூடாதென வேண்டுகோள் வைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் பொதுச்சுடரை ஏந்தி, பாதிக்கப்பட்ட தாயொருவரிடம் வழங்குவதென அவர் ஒரு சமரச திட்டத்தையும் முன்வைத்தார்.
எனினும், பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உடனடியாக சாதகமாக பதிலெதுவும் வழங்கவில்லை.
இதேவேளை, பஷீர்காக்கா இந்த சமரச முயற்சியின் ஒரு கட்டமாக நாளை முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளார்.
இதற்கான நேரம் முதலமைச்சரால் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது.