ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியொன்று உருவாக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிகொத்தவின் நிர்வாக நடவடிக்கைகளை கிரமமான முறையில் முன்னெடுப்பதற்கு பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலோ, நாடாளுமன்ற நடவடிக்கைளிலோ ஈடுபடாத முழு அளவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஒருவரை கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்களின் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதே பிரதம நிறைவேற்று அதிகாரியின் பொறுப்பு என தெரிவிக்கப்படுகிறது.