தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது மகள் உயிரிழந்தாள் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த விபத்தில் காயமடைந்த சிறுமியே நேற்று உயிரிழந்தாள். அதே இடத்தைச் சேர்ந்த சுகந்தன் துசாந்தினி என்பவரே உயிரிழந்தாள்.
காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்குப் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகப் புறப்படும்போது தனது மகளை முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கிவிடுவது வழக்கம்.
அவ்வாறு இறக்கிவிட்டுவிட்டு வாகனத்தை திருப்பியபோது வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக மகள் முன்பள்ளிக்குள் நுழைவதற்கு எத்தனித்தபோது வாகனத்துடன் மோதுண்டார்.
அவர் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அது பயனளிக்கவில்லை. பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.