வவுனியாவில் முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (EPRLF) வவுனியா மாவட்ட பொருப்பாளருமான க.பரமேஸ்வரன் (பாபு/மோஸஸ்) அவர்களை திட்டமிட்டு வஞ்சக தனமாக தாக்குதல் நடாத்திய வவுனியா நான்காம் கட்டை பகுதியில் இரும்பகம் (ஹாட்வெயார்) ஒன்றை நடாத்திவரும் செல்லதம்பி சிறீதரன் தலைமறைவு
இது பற்றி மேலும் அறியவருதாவது
கடந்த 08.05.2018 அன்று பரமேஸ்வரன் அவர்களை வஞ்சக தனமாக தொலை பேசியில் அழைப்பு விடுத்து வவுனியா நெழுக்குளம் பகுதிக்கு வரவழைத்து அவர் மீது கண்மூடிதனமாக தாக்குதல் நடாத்திய சிறீதரன், மற்றும் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர் அருள் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
பொலிஸார் மற்றும் பரமேஸ்வரனின் ஆதரவாளர்களும் இவர்களை தேடிவரும் நிலையில் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
இதேவேளை சிறீ என்பவர் மீது பல ஆட்கடத்தல் முறைப்பாடுகளும் பதிவில் உள்ளது மேலும் காசோலை முறைப்பாடு ஒன்றிலும் இவரை பொலிஸார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.