பிரேசிலில் திருமண ஆசையோடு வீட்டிற்கு சென்ற ஜோடி கார் விபத்தில் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பிரேசிலின் Passos-ல் உள்ள தேவாலயத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் Luana Alves(36)-Rodrigo Nogueira(31) ஜோடிக்கு திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு திருமணத்திற்கு தயார் ஆக வேண்டும் என்பதற்காக காரில் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பிரேசிலின் 184-வது தேசிய சாலையில் Rodrigo Nogueira காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது, அவர் முன்னே சென்ற காரை முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு கார்களும் மோதிக்கொண்டதால் சம்பவ இடத்திலே Luana Alves பலியாகியுள்ளார்.
படுகாயமடைந்த Rodrigo Nogueira மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
திருமணத்திற்கு தேவாலயத்தில் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இருப்பினும் இருவருமே பலியாகியதால் அவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
விபத்து நடந்த மற்றொரு காரில் இருந்த Jorge Rocha(50) என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.