பொதுமக்களுக்கு எப்பயனும் இல்லாத தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிடின், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எச்சரித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு மாதங்களுக்குள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, தனி அரசாங்கத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அதிலிருந்து விலகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் ஆதரவளித்ததை தொடர்ந்து, அவர்களுக்கு எதிரான விமர்சனங்களை அடுத்து இவர்கள் பதவி விலகியதுடன், அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.