ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரசிங்க ஆகியோர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறி அவர்களை ஏமாற்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களுக்கு சுமையினை வழங்கமாட்டோம் என நல்லாட்சி அரசாங்கம் உறுதியளித்த போதும், அதற்கு மாறாகவே இவர்கள் செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது என தே.சு.மு.யின் பிரச்சார செயலாளர் முகமட் முசாமில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் இருந்து எரிபொருள் விலை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை 20 ரூபாய் 14 ரூபாய் மற்றும் 57 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இதன் விளைவால் தேயிலை, தேங்காய் மற்றும் ஏழை மக்களுக்கான அரிசி பொதியின் விலை, பால் விலை போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கூறினார்.