அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.
அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.
தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமில்லாமல் அன்பு காட்டுவதே நமது அம்மா.
தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் என அனைவரும் கூறுவார்கள். அந்த பெண் நிச்சியமாக ஒரு அன்னையாக தான் இருப்பார்.
அதேபோன்று உலகில் புகழ்பெற்ற பல சாதணையாளர்கள் அனைவருக்கும் பின்னால் ஒரு அன்னையே உள்ளார் என்பதை வெளிக்காட்டு தொகுப்பு ஒன்று பின்வருமாறு.
உலக புகழ் புகழ்பெற்ற காலப்பந்தாட்ட வீரர் லீயனல் மெஸ்ஸின் தாயார் Celia María Cuccittini
உலக புகழ் புகழ்பெற்ற காலப்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் Maria Dolores dos Santos Aveiro
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனியின் தாயார் தேவகி தேவி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டென்டுல்காரின் ரஜ்னி டென்டுல்கார்
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா கேம்
சிறந்த விஞ்ஞானியும், தலைவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாமின் தாயார் Ashiamma Jainulabiddin
தென்னாப்பிரிக்க தந்தை என்றழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் தாயார் Noqaphi Nosekeni
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சி தலைவருமான பிடெல் கெஸ்ரோவின் தாயார் Lina Ruz González
உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசனின தாயார் Nancy Matthews Elliott
பிரபல பொப் இசை அரசர் மைக்கல் ஜெக்சனின் தாயார் Katherine Jackson
ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவருமான விளாதிமிர் லெனின் தாயார் Maria Alexandrovna Ulyanova
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் தாயார் Karen Kempner
இத்தனை பெறுமதியான சொத்துக்களை எமக்காக தந்த அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் உலகம் முழுவதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகம் முழுவதும் வாழும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!