Loading...
பணய கைதிகளாக, கிரேக்க நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கிரேக்க நாட்டு பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின் நகர் ஒன்றில் 50 அகதிகள் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
Loading...
குறித்த அகதிகளின் குடும்பத்தாரை மிரட்டி கப்பம் பெறும் நோக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 50 பேர் கொண்ட குழுவில் மூன்று இலங்கையர்களும் உள்ளடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...