கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு விசேட திட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் டெங்கு நோய்பரவக்கூடிய வகையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கரைச்சிப்பிரதேச சபையும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (12-05-2018) காலை 7.00 மணிமுதல் முன்னெடுக்கப்பட்ட இவ்விசேட வேலைத்திட்டத்தில் 10 இற்கும் மேற்பட்ட கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சிரமதானப்பணிகள் மற்றும்; கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.