ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் நடந்த திருமணத்தின் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, கர்நாடகாவை சேர்ந்த சிறுவனின் உறவினரான அய்யம்மாள் என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27ம் திகதி திருமணம் நடந்துள்ளது.
சிறுவன் இளம்பெண் உறவினர் என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த இரு வீட்டாரின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்தின் போது இளம்பெண் சிறுவனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது பற்றி அறிந்த இரு குடும்பத்தாரும் சிறுவனுடனும், இளம்பெண்னுடனும் தலைமறைவாகி விட்டனர்.
மைனர் சிறுவனை திருமணம் செய்துள்ளதால் அவர்களின் பெற்றோர்களை சட்டபடி கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.