தமிழ் நடிகர்கள் மக்கள் மனதில் பதிவது ஒன்றும் பெரிய விடயம் அல்ல…அவர்களுடன் துணை நடிகர்களாக நடித்து மக்கள் மனதில் இடம் பெறுவது தான் பெரிய விடயம்.
அந்த வகையில், பார்த்தால், துணை நடிகராக தமிழில் பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீமன் 1994 ஆம் வருடம் புதிய மன்னர்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றளவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
முதலில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் ஸ்ரீமன் பின்னர் காமெடியான கதாபாத்திரகைள நடித்து வருகிறார்.
நடிகர் சியான் விக்ரமுடன், சேது படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது. இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதனால் தான் நடிகர் லாரன்ஸ் தான் இயக்கிய காஞ்சனா 2 படத்திலும் இவரை நடிக்க வைத்தார்.
நடிகர்கள் படத்தில் வித்யாசமான கெட் அப் போடுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், சமீபத்தில் நடிகர் ஸ்ரீமன் ஒரு பிச்சைக்காரரை போன்ற கெட் அப்பில் இருப்பது போன்று ஒரு பகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,இந்த புகைப்படத்தைப் பார்த்த நடிகர் ஸ்ரீமன் ரசிகர் ஒருவர் என்ன பாலா படமா என்று கமென்ட் செய்துள்ளார்.
அதற்க்கு ஸ்ரீமன் அப்படியெல்லாம் இல்லை, இது வேறு படத்திற்காக. ஆனால், பாலா படத்தின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.
— actor sriman (@ActorSriman) May 11, 2018