Loading...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக காலி பிரதேசத்தில் பல வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன.
நேற்று இரவு பொழிந்த கடும் மழை காரணமாக இவ்வாறு வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிடையே பஸரை – நமுனுகுல வீதியில் கற்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Loading...
இதனிடையெ கடும் மழை காரணமாக பின்தெனிய பிரதேசத்தில் மரங்கள் உடைந்து வீழ்ந்து 8 வீடுகள் சேதமாகியுள்ளன.
இதன்போது காயமடைந்த இரு பெண்கள் பின்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்து 45 பேர் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading...