ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு தோல்வி அடைந்த விடயத்தை, இரு கட்சிகளின் தலைவர்களிடமும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான பதில் எதனையும் வழங்கவில்லை எனத் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.