ஊருகஸ்மங்சந்தி – கலுவல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியொன்று சுயமாக இயங்கியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சூதாட்ட நிலையம் தொடர்பில் நேற்று இரவு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நூற்றுக்கு அதிகமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் அந்த இடத்தில் இருந்த நபர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, அவர் ருவான்புர – கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது 5 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.