வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் சிகிச்சைக்கு வந்த மக்கள் கடும் அவதிப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் சம்பள அதிகரிப்பானது அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பான அரச சுற்றறிக்கைக்கு அமைவாக ஏனைய மாகாணங்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், வடமாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கான மேலதிக நேர சம்பளக் கொடுப்பனவானது கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத நிலையில் வைத்தியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்தியசாலைகளுக்கு வந்த நோயாளர்கள் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.