ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜாவை தோனி பந்தால் அடிப்பது போன்று நகைச்சுவையாக பயமுறுத்திய காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றையை ஐபிஎல் 46வது லீக் போட்டியில் சென்னை அணி மோதியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் விளையாடியது.
இந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது 6.5வது பந்தை ஹர்பஜன் சிங் வீசினார். அதை வில்லியம்சன் ஷாட் மிட் விக்கெட்டில் அடிக்க அதை தோனி வேகமாக ஓடி எடுத்தார்.
பந்தை எடுக்க பவுண்டரி லையனிலிருந்து ஓடிவந்த ஜடேஜாவை பந்தை கொண்டு எறிவது போல் தோனி செய்தார்.
இதை சிறிதும் எதிர்பாராத ஜடேஜா பயந்து போனார். பின்னர் தான் தோனி நகைச்சுவைக்காக செய்தார் என தெரிந்தது.
தற்போது இந்த வீடியோவை இணையவாசிகள் டோனி மற்றும் ஜடேஜாவின் செல்லச் சண்டை என்று குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
blob:https://www.dailymotion.com/fa237f79-2730-4386-9574-bc0d749d51fb