நாட்டில் நீண்ட கால யுத்தத்தை நிறைவு செய்த மகிந்த ராஜபக்சவையே மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது வரை காலமும் நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை.
அதனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு சரியான சேவையை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
தலவாக்கலை சுமன சிங்கள வித்தியாலயத்தில் இன்று (14) இடம்பெற்ற சித்திரம் மற்றும் பத்திரிகை கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
மாணவர்கள் தாய் மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பொது மொழியான ஆங்கில மொழிக்கு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
ஆனால் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் அளவிற்கேனும் வளர்ச்சியடைந்துள்ளனரா என பார்க்க வேண்டும் என்று கூறினார்.