கல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது.
2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுள்ளது.
சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது. கல்லடியின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஓரமாக இலங்கையின் பிரசித்தி பெற்ற ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது.
புகழ்பெற்ற சிவானந்தா வித்தியாலயம், இராமகிருட்டிண மிசன் ஆகியவை இப்பிரதேசத்தின் பெருமைக்குரிய சொத்துக்கள் ஆகும்.
கல்லடியின் கடற்கரை மட்டக்களப்பு மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முதன்மை பெறுகின்றது.