போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி செய்தார். அதனால் ஆட்சியில் இருந்த அவரை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இடமளிக்க மாட்டார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க.
தலவாக்கலை சுமன சிங்கள வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற சித்திரம் மற்றும் பத்திரிகை கண்காட்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-,
உரிய வளர்ச்சி ஏற்பட்டால் நாட்டில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும். இதுவரை காலமும் நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்குச் சரியான சேவையைச் செய்யவேண்டும்.- என்றார்.