பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கற்றாலை பிட்டி காட்டு பகுதியில் சந்தோகத்திற்கு இடமாக ஆட்கள் நடமாட்டத்தை அவதானித்த மக்கள், காட்டு பகுதியினுள் சென்று பார்வையிட்ட போது, கற்றாலை செடிகள் 40இற்கு மேற்பட்ட பைகளில் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டதையடுத்து வங்காலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு இந்த மூவரையும் பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, வங்காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அந்த பகுதிக்கு வருதை தந்த பொலிஸார் கற்றாலைகளையும், சந்தேக நபர்கள் மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம் , எருக்கலம் பிட்டி ,வங்காலை, கற்றாலை பிட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவிலான கற்றாலை செடிகள் காணப்படுகிறன. அதனை அகழ்வு செய்து கொடுக்கும் பட்சத்தில் தங்களுத்கு நாள் கூழி வழங்கப்படுவதாகவும், கற்றாலைகள் குருநாகல் மாவட்டத்திற்கு பயிர்செய்கைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட கற்றாலை அகழ்வோடு சம்மந்தப்பட்ட மூவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கற்றாலை எமது பிரதேச மக்களின் மருத்துவ தேவைக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.