முத்தையன்கட்டு – ஜீவநகர் பகுதியில் மின்னல் தாக்கியமையினால் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த பி.தினேஸ்குமார் (14) என்ற அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு நேற்று மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் உணவு உட்கொண்டிருந்த வேளையில் மின்னல்தாக்கத்திற்கு இலக்காகி வீழ்ந்துள்ளான். பின்னர் அயலவர்களின் உதவியுடன் அம்மாணவன் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
இந்தப் பகுதியில் மழைகாலங்களில் இவ்வாறான மின்னல்தாக்கங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவந்த அம்மாணவனுக்கு அண்மையில் பாடசாலை நிர்வாகத்தின் உதவியுடன் புதிய துவிச்சக்கர வண்டியொன்றும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.