பாலிவுட் நடிகைகளும் சரி, நடிகர்களும் சரி தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்வாரகள். அதிலும் முன்னனி நடிகர்களில் சிலர் 50 வயதை கடந்தும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இந்தி சினிமாவில் 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். ஷாருகான், சல்மான் கான் போன்ற பாலிவுட் ஜாம்பவான்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர். சமிபத்தில் இவர் நடித்த பேட் மேன் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
சமீப காலமாக தேர்தெடுத்து கதாபாத்திரங்களில் நடித்த வரும் இவர், தற்போது தமிழில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது 50 வயதுக்கும் இவர் சமீபத்தில் ஒரு குளத்தில் தனது கைகளில் இரண்டு டம்பெல்களை வைத்து, போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாக்ரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இப்படி ஒரு உடல் அமைப்பா ? என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தற்போது அவரின் அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசியகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வருகிறது.