ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ் தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தத்தை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆண்டி-டீ இருப்பதை கண்டறிந்தனர்.
அவரது ரத்த பிரிவின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கிமோலைட்டிக் என்ற நோயிலிருந்து தடுக்க முடியும். இந்த நோயினால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவிலிருந்து பாதுகாக்க ஜேம்சின் ரத்தம் உதவுகிறது.
ஜேம்சிடமிருந்து 1964-ம் ஆண்டிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கற்பமாக உள்ள பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜேம்ஸ் 70 வயதை கடந்து விட்டதால் அவர் தனது கடைசி ரத்த தானத்தை வழங்கினார். ஜேம்சின் செயலுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இது போன்று ஆண்டி-டீ சிகிச்சைக்கு உதவும் வகையிலான ரத்தம் கொண்டவர்கள் 160 பேர் உள்ளனர்.