முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஈகை சுடரேற்றும் பகுதியில்இருந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியேற்றப்பட்டார்.
இன்று வடமாகாணசபையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வுக்கான ஒ|ழுங்கமைப்பு பணிகளை ஜனநாயக போராளிகள் கட்சி கடந்த சில நாட்களாக முன்னெடுத்திருந்தது. இதன் அடிப்படையில் ஈகை சுடர் ஏற்றுவதற்காக இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமி ஒருவரையும் ஈகை சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளை ஜனநாயக போராளிகள் கட்சியே செய்திருந்தது.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஈகை சுடர் ஏற்றுவதற்காக முதலமைச்சர் குறித்த ஈகை சுடர் ஏற்றும் பகுதிக்கு வருகை தந்த போது ஏனைய அரசியல்வாதிகள் எவரையும் பல்கலைக்கழக மாணவர்களால் அனுமதிக்கவில்லை.
எனினும் குறித்த பகுதிக்குள் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி நின்றதோடு முதலமைச்சரோடும் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
எனினும் உடனடியாக செல்ல மறுத்த துளசி அவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்த போது சில மாணவர்கள் அவரை பின்புறமாக தள்ளிச்சென்று குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.