கா்நாடகா சட்டசபையில் ஆட்சி அமைப்பது யாா் என்ற எதிா்பாா்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கா்நாடகாவில் 104 சட்டமன்ற உறுப்பினா்களின் ஆதரவைக் கொண்ட எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை 4 மணிக்கு எடியூரப்பா தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளாா்.
முன்னதாக காலை 11 மணிக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினா்களும் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனா்.
இதனைத் தொடா்ந்து கா்நாடகா சட்டசபையை சுற்றிலும் 1 கி.மீ. அளவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தற்காலிக ஆளுநரை மாற்றக்கோாி காங்கிரஸ் கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.