20.05.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், வைகாசி மாதம் 6ம் திகதி, ரம்ஜான் 4ம் திகதி, 20.5.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 7:01 வரை; அதன் பின் சஷ்டி திதி இரவு 3:37 வரை;
அதன் பின் சப்தமி, பூசம் நட்சத்திரம் இரவு 2:47 வரை; அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த யோகம்.
நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
குளிகை : மதியம் 3:00–4:30 மணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : முகூர்த்த நாள், சஷ்டி விரதம், முருகன், சூரியன் வழிபாடு.
மேஷம்:
திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரிஷபம்:
மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.
மிதுனம்:
மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் பெறுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்:
பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். தொழில் வளர்ச்சியால் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
சிம்மம்:
வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளின் வழியில் ஆடம்பரச் செலவு ஏற்படும்.
கன்னி:
நண்பரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.
துலாம்:
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.
விருச்சிகம்:
திட்டமிட்ட செயல் இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வங்கி நிதியுதவியுடன் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர்.
தனுசு:
முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் திணறுவர். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும். தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.
மகரம்:
மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவைப் பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
கும்பம்:
குடும்ப விஷயத்தைப் பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டியால் லாபம் சுமாராக கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.