தீவிரவாதிகள் யார் இராணுவத்தினர் யார் என்பதனை தெளிவுபடுத்திகொள்ள முடியாமல் இன்று பலர் உள்ளமை வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நாடாளுமன்ற மைதானத்தில் இராணுவத்தினருக்காக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற போரின் போது இராணுவத்தினரால் சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு சிங்களவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கூறிய கருத்து ராஜிதவை மறைமுகமாக தாக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
சில ஊடகங்கள் மற்றும் இனவாத அமைப்புகள் தவறாக சித்தரிக்கும் கருத்துக்களுக்கமைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளரின் யோசனையில் இராணுவத்தினருக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகள் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு வெளியே அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினருக்கு எதிராக விடுதலை புலிகளுக்கு நெருக்கமானவர்களினாலே இவ்வாறான குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் மற்றும் பணத்திற்கு பின்னால் செல்லும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இன்று இராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.</