வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனதிபதி, பிரதமர் பதில் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேலியகொடையில் நேற்று இடம்பெற்ற இராணுவ நினைவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வைத்து கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், கடந்த காலங்களில் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அவருடைய குறித்த கருத்திற்கு தான் எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறிய மஹிந்த, இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த கருத்து தொடர்பில் முடிவை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.