கன்னியாகுமரியில்அமைக்கப்படவுள்ள பெட்டக மாற்று முனைய துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்ஈடுபட்ட 5 எம்எல் ஏக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
கன்னியாகுமரியில்24 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச வர்த்தக மையம் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்குபொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கீழ மணக்குடி முதல் கோவளம் வரை சரக்கு பெட்டகமாற்று முனைய துறைமுகம் அமைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாகவே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிஎம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து நேற்று தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 எம்ஏல்ஏக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு செய்துள்ளனர்.