யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம்; கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்ய்பட்டவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொடிகாமம் பிரதேச காவல்துறையினரால் நேற்றைய தினம் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், இரண்டு வாள்கள் உட்பட சில ஆயுதங்களும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்கள், கொடிகாமம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்