மெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121.
கார்சியாவின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைத் தகவல்களின்படி அவர் 24-12-1896ஆம் ஆண்டு பிறந்தவர்.
அப்படியெனில், கார்சியா உலகின் மிக ஆக வயதுமிக்கவராக இருக்கக்கூடும்.
தம்மிடம் ஆதாரம் இருந்தாலும், அதை கின்னஸுக்கு அனுப்பி அதன் சாதனைப் பட்டியலில் இடம்பெறுவதில் எல்லாம் அவருக்கு விருப்பமில்லையாம்.
தமக்கு வயது 121ஆக இருந்தாலும், 80 வயது போல்தான் உணர்வதாகக் கூறுகிறார் அவர்.
நீண்ட ஆயுளுக்குக் காரணம் நல்ல உறக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, விடிகாலையில் துயிலெழுதல், சோம்பலின்றி முடிந்த வேலைகளைச் செய்தல்-எனப் பலவற்றைப் பட்டியலிடுகிறார் பாட்டையா !
கார்சியாவுக்குத் தன் வாழ்வில் இரண்டே இரண்டு வருத்தங்கள்தானாம். ஒன்று தமது தந்தையை இளம்வயதில் இழந்தது… மற்றொன்று அவரால் முன்னைப் போல் வேலைசெய்ய முடியாதது.
125 வயதுவரை வாழ்ந்தால் போதும்… அதற்குமேல் வேண்டாம் என்கிறார் தாத்தா