Loading...
எல்லா நேரமும் டிவிலியர்ஸை நம்பியே எப்படி இருக்க முடியும் என பெங்களூரு அணித் தலைவர் விராட் கோஹ்லி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய போட்டியில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியிடம் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கான கடைசி வாய்ப்பையும் பெங்களூர் அணி கோட்டைவிட்டது.
Loading...
தோல்விக்கு பின்னர் பேசிய விராட் கோஹ்லி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலாக செயல்பட்டனர்.
எப்போதும் டிவிலியர்ஸே கைகொடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்.
அவர் முடிந்த அளவு ஓட்டங்களை சேர்த்தார். ஆனால் மற்றவர்களும் கைகொடுத்தால் தான் அணி வெற்றி பெறும் என குமுறியுள்ளார்.
Loading...