Loading...
17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சியைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மணமகளை மீட்டு சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டம் கொந்தகைப் பகுதியில் நடந்துள்ளது. மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும், அவரது உறவினரான 36 வயதுடைய நபருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அழைப்பிதழ் ஊடாக உறவினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
Loading...
சட்ட விரோதமாக இன்று திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், சிலைமான் காவல் நிலையத்திற்கும் முறைப்பாடு செய்தனர்.
Loading...