ஸ்ரீ லங்காவில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் எத்தகைய அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்கு முப்படையினரும், பொலிசாரும், இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்பாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய பிரதேசங்களுக்கும், கரையோரப் பிரதேசங்களுக்கம் பெரும் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இதேவேலை இந்த அழுத்த நிலைமைகள் காரணமாக இதுவரை மூன்றுபேர் மின்னல்தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்ததனால் உயிரிழந்துளதாகவும் மேலும் தெரிவித்தார்.