குடும்பத் தகராறில் மனைவியை கைத் துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டு இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
இதேவேளை மனைவியை சுட்ட போது மனைவி இறந்துவிட்டதாகக் கருதி தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான ரஞ்சித்குமார், விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
திருச்சி ரயில்வேயில் பணியாற்றி வரும் அவரது மனைவி ரஜினிகுமாரிக்கும் ரஞ்சித்துக்கும் இடையே மாலை வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு உச்சத்தை அடைந்த நிலையில் கோபத்தில் ரஞ்சித்குமார், தனது கைத்துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூர்ச்சையாகிக் கிடந்த ரஜினிகுமாரி இறந்துவிட்டதாகக் கருதிய ரஞ்சித்குமார், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அயலவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஜினிகுமாரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்தே சிகிச்சை பலனின்றி நேற்று (19) இரவு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.