உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்திய மதிப்பில் 654 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டது.
முழுவதும் பனி படர்ந்த ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் என்ற நகருக்கு அடுத்தண்டு இறுதிக்குள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
அங்கே இருக்க கூடிய ஊர்களுக்கு இதன் மூலம் மின்சாரம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விதிமுறைகளின் படி இந்த அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் என கப்பலை தயாரித்த ரஷிய அரசு நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது.
மிதக்கும் கப்பல் என்றாலும், இதன் உள்ளே கப்பலுக்கு உண்டான எந்த பாகங்களும் கிடையாது.
இழுவைகள் மூலமே இந்த மிதக்கும் அணுமின் நிலையம் இழுத்துச் செல்லப்பட்டும் எனவும் தெரியவந்துள்ளது.