Loading...
நாட்டின் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக அவிசாவளை – தெரணியகல பகுதியில் களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் அதனை அண்டி வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
Loading...
அவிசாவளையின் பல பகுதிகளிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குக்குலே கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதனை அண்டி வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
Loading...