மண்சரிவு அபாயம் காணப்படும் களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை பளிந்தநுவர பகுதியிலேயே மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை இந்த எச்சரிக்கை நீடிக்குமென, தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதியில் தொடர்ந்தும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைபெய்து வருவதோடு, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.