Loading...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர்.
இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை நடந்துள்ளது.
பருத்தித்துறையிலிரந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, புத்தூர் பிரதேச சபை பிரதான வீதி வளைவில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மின்கம்பத்துடன் மோதுண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும் படுகாயமடைந்தனர்.
Loading...
விபத்தில் காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...