அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரை துண்டறிக்கையில், தனது பிள்ளையின் படம் காணப்படுவதாகத் தெரிவித்த தாயிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இரண்டு தாய்மார் கடந்த வாரம் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தாய்மாரும் தனித் தனியாக வெவ்வேறு நாள்களில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரச தலைவர் செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டதாக தம்மிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர் என்று, இரண்டு தாய்மாரும் தெரிவித்தனர்.