பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும். சில ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். பெண்களின் கவனத்தை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் அவர்களது கடைக் கண் பார்வை மூலமே ஈர்க்க முடியும்.
இவர்களைச் சுற்றி பெண்கள் எப்பொழுதும் அன்பையும், பாசத்தையும், காதலையும் பொழிவார்கள். மிதுன ராசிக்கார ஆண்கள் காதல் மன்னனாக வலம் வரக்கூடியவர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப் படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.