நாட்டில் பெய்யும் தொடர்ச்சியான மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மாத்தறை மாவட்டத்திலுள்ள அகுரஸ்ஸ- தலாகம ஊடான மாக்கந்துர வீதி, போப்பாகொட- அகுரஸ்ஸ ஊடான மாரகொட வீதி, போரதொட்ட, ஹகலகட மற்றும் பானந்துகம வீதிகளும் முற்றாக நீரிழ் மூழ்கியுள்ளன.
இதனால் இப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் நீரில் மூழ்கிய வீதிகளில் மக்கள் படகுகளின் மூலம் பயணிப்பதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையின் 15 மாவட்டங்களில் மழை பெய்து வருதோடு, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. மழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.