தொடருந்து பயணித்தபோது கடவை மூடப்படாததால் பாதசாரிகள் தொடருந்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர். ஒருவர் மாணவருடன் கடவைக்கு அருகில் வீழ்ந்து அந்தரித்தார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதியிலுள்ள கடவையில் நேற்று மதியம் 1.47க்கு இடம்பெற்றது சம்பவ நேரம் நின்றவர்கள் தெரிவித்தனர்.
தொடருந்து பயணித்ததை எவரும் கவனிக்கவில்லை. தொடருந்து ஒலி (கோர்ன்) எழுப்பவுமில்லை. பாடசாலை நிறைவடைந்து பிள்ளைகளுடன் பெற்றோர் விரைந்து கொண்டிருந்தனர். கடவையைக் கடந்தபோது தொடருந்து வந்து கொண்டிருந்தது.
கடவைக் காப்பக கடவை போடப்படவில்லை. அதனால் தொடருந்து வரவில்லை என்று கருதி தாம் கடவையை மக்கள் கடந்துள்ளனர். திடீரென வந்த தொடருந்து கடந்து செல்லும்போதே ஒலி எழுப்பியவாறு பயணித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
“தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதில் கடமையில் இருந்தார். பணிப்புறக்கணிப்புக் காரணமாக அவர் அதில் தற்போது கடமையில் இருப்பதில்லை” – என்று கடவைக் காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் தெரிவித்தார்.