தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ஹன்ஷிகா. பேமஸ் நடிகையாக வலம் வந்த இவர் தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார்.
அதர்வாவுடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் மட்டுமே நடித்து வருகிறார். பொசுபொசுவென இருந்த இவரை ரசிகர்கள் அனைவரும் சின்ன குஷ்பூ என கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் ஹன்ஷிகா தற்போது கடும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து குச்சியாக இளைத்துள்ளார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இன்னும் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த ஹன்ஷிகா இப்போ இப்படி இவ்ளோ ஒல்லியாவா? என அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீங்கள் கொஞ்சம் குண்டாக இருந்தா தான் அழகு சோ கொஞ்சம் வெயிட் போடுங்க என கூறியுள்ளார்.