காலி, வெக்குனகொட அரசாங்க வீட்டு தொகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து நிர்வாணமாக நின்ற நபர் ஒருவரை அந்த பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
உனவட்டுன சுகாதார சேவை இயக்குனர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக சேவை செய்யும் பெண் கடந்த வெள்ளிக்கிழமை காலை வீட்டை மூடிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டு அருகில் வசிக்கும் அயலவர் ஒருவர் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தங்கள் வீட்டுக்குள் யாரோ நுழைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய வீட்டிற்கு வந்து பார்க்கும் போது நபர் ஒருவர் நிர்வாணமாக நின்றதனை அந்த பெண் அவதானித்துள்ளார்.
பின்னர் அயலவர்களுடன் இணைந்து சந்தேக நபரை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.