கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் கலைநயமிக்க படைப்புக்களை உருவாக்கிவரும் வீதியோர சித்திரக் கலைஞர்களின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
சுய முயற்சியோடு முன்னேறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் வீதியோர சித்திரக் கலைஞர்களுக்கு உறுதுணையாக அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கும் பொருட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கேற்ப தற்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையிலுள்ள வீதியோர சித்திரக் கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட காட்சிப்பலகையும் அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.